“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இந்தியாவுக்கு, இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில் மாகாணசபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்பது சரியா,”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது தேசிய பாடசாலைகள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
குறிப்பாக மாகாணசபைகளுடன் பேச்சு நடத்தப்பட்டே, மாகாண பாடசாலைகள, தேசியப் பாடசாலைகள் ஆக்கப்படுகின்றன என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வேளையிலேயே கிரியல்ல இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர்,
” பொறுத்தமற்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம். அரசு எதையும் முறையாகவே செய்யும்.” – என்றார்.
#SriLankaNews