மின்சாரமின்றித் தவிக்கும் அயர்லாந்து (வீடியோ)

Ireland

அயர்லாந்து முழுவதும் சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 130கிமீ வேகத்தில் கற்று வீசுவதனால் இன்று (08) நண்பகல் வரை டொனேகல் கவுண்டியில் செம்மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள காரணத்தினால் டொனேகல், கார்க், வெக்ஸ்ஃபோர்ட் மற்றும் கெர்ரி முழுவதும் 26,000 வாடிக்கையாளர்களுக்கு நீர் தொடர்பான அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 138 கி.மீ. வேகத்தில் கற்று வீசுவதனால் வேல்ஸில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பயணத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

#WorldNews

Exit mobile version