கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து அறிமுகம்.

corona vaccine

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த ஊசியில்லா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் 3 வது தடுப்பூசியாக ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version