தமிழரசின் மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய அதிகாரி!

இலங்கைத் தமிழரசுக் கட்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் 7ஆம் திகதி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மாவட்ட மகளிர் அணித் தலைவர் கௌசலா ஜெயக்காந்தராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் பானு பிரகாஸ் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version