தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் டெங்கு காய்ச்சல் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில்,சென்னையில் சில நாட்களாக மழை பெய்து வருவதனால் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் பரவும் அபாயம் உள்ளதால் கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பல பகுதிகளிலும் மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment