mlam hizbullah
செய்திகள்இலங்கை

மண்முனைப்பற்று முஸ்லிம் மக்களின் காணி உறுதிப் பிரச்சினை: நீதித்துறை விசாரணைக்கு பிரதி அமைச்சர் உத்தரவாதம்!

Share

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடரப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் 30% முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குப் பல ஆண்டுகளாகக் காணி உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் வழக்குத் தொடுக்கப்பட்டு வருவதாகவும், இதைக் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் இவ்வாறு செயற்படுவதை ஆராய காணி அமைச்சால் விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க முடியுமா என்றும் அவர் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண, மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அரச காணிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகம் ஊடாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம்.

காணியற்ற மக்கள் தங்களுக்குக் காணியொன்றைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சிலருக்குக் காணி வழங்கியுள்ளோம், ஆனால் அவர்களுக்கு உறுதி அல்லது அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

காணி உறுதி அல்லது அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமைக்கான காரணங்களாக அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டார்.காணி கோரி விண்ணப்பித்தவர்களில் சிலர் காணி கச்சேரிக்கு வருகை தராதமை. 8 பேர்ச்சிற்கு குறைந்த காணி விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டது. காணி முரண்பாடுகள் இருக்கும் அரச காணிகளில், அந்த முரண்பாடுகள் தீர்க்கப்படாததால் உறுதி வழங்க முடியாமல் போனமை.

Share
தொடர்புடையது
images 2 2
செய்திகள்இலங்கை

போலி பிரேசிலிய கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த செனகல் பிரஜை: மீண்டும் தோஹாவிற்கு நாடு கடத்தல்!

போலியான பிரேசிலியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று...

check afp sri lanka politician shot dead inside office 68f9b44b44c76 600
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்குக் காரணமான சந்தேகநபர்கள் குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாக...

1744006431 namal cid 6
செய்திகள்இலங்கை

“திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு அரசுப் பாதுகாப்பில் இடமளிக்க வேண்டாம்”: நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்!

அரச பாதுகாப்பில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இடமளிக்க வேண்டாம் என மொட்டுக் கட்சியின் (SLPP)...

25 68fa0ce16e51c
செய்திகள்இலங்கை

“நலன் முரண்பாட்டில் செயல்பட்ட சிறிதரன்”: நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...