Sulipuram Paralai Vinayagar Kovil Jaffna e1647417483436
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விநாயகர் ஆலயத்தை பௌத்த சின்னமாக மாற்ற முனைப்பு!!

Share

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறாளாய் விநாயகர் ஆலயம் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. குறித்த ஆலய வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான அரச மரம் காணப்படுகின்றது.

இந்நிலையில் அண்மைக் காலமாக குறித்த அரச மரத்தடியில் வழிபாடு செய்வதற்கு என படையினரின் உதவியுடன் பௌத்த பிக்குகள் அடிக்கடி இந்த ஆலயத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நாளை வியாழக்கிழமை பௌர்ணமி தினத்தன்று அரச மரத்தடியில் படையினரின் உதவியுடன் பிக்குகள் தாம் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

பிக்குகளின் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தி பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காக அரசியல் வாதிகள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...