நாட்டின் சில பகுதிகளில் வானில் பறந்து வந்த சிலந்தி வலையை ஒத்ததான வலையானது, இயற்கையானது என கொழும்பு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இக் காலப்பகுதியில் சிலந்தி முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியேறும்போது வெளியாகும் ஒரு வகையான சிலந்தி வலையே இதுவென அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தளை – வில்கமுவ, அம்பாறை – உஹன, சூரியவெவ, தெஹியத்தகண்டிய மற்றும் லுணுகம்வெஹெர போன்ற பிரதேசங்களில் இவை அவதானிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்விலேயே, இந்த வலையானது, சிலந்தி வலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.