Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

Share

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

மதுபான சாலைக்கான அனுமதி வழங்குவதில் இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என அமைச்சர் விளக்கமளித்தார். விலை மனுக்கள் கிடைத்த பின்னர் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் வழிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்குதல்.

விலை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், முறையாக நிலையான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா, தூரத்திற்குக் குறைவாக அந்தப் பகுதியில் மதுபானசாலை அமைக்க முடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படும்.

அரச அதிகாரிகளினால் இந்த விடயங்களில் எவ்வித தவறும் ஏற்படவில்லை என்றே நிதி அமைச்சின் செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

எனினும், விலை மனுதாரர்களைத் தெரிவு செய்யப்படும் போது ஏற்பட்டுள்ள மோசடி குறித்தே அரசாங்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...