shave
செய்திகள்இலங்கை

நாட்டை முழுமையாக திறப்பது தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

Share

பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் 15ம் திகதி வரையில் தொடரும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

சுகாதாரத்துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் அந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த மாதத்தில் சகல பாடசாலைகளையும் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் சகல மாகாணங்களதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில், 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளில் (1-5) ஆரம்ப பாடசாலைகள், 100 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலைகள் என 3,000 வரையான பாடசாலைகளை மீள திறப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...