வர்த்தக அமைச்சர் பந்துலவுக்கும் தொற்று!!

பந்துல குணவர்தன

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது பல ஊழியர்களுக்கு கொவிட் 19 இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதியானது.

கடந்த வாரம் முதல் என்னுடன் பணியாற்றிய அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த மாதம் இதுவரை 9 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.

 

 

Exit mobile version