பாடசாலைகளில் தொற்று – அச்சத்தில் பெற்றோர்!!

schoolboys near school building india goa india february schoolboys meeting near school building india 193769319

பாடசாலைகளில் தொற்று – அச்சத்தில் பெற்றோர்!!

நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் நாட்டில் கல்லூரிகள், பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது.

நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியிருந்தது. இப்போது கடலூர் மாவட்டத்திலும் ஆசிரியை ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

பெரியநல்லூரில் உள்ள ஆசிரியை ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இவர் அவர் கடந்த இரு நாள்களாக பாடசாலைக்குச் சென்று வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்தப் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version