சீனாவின் வுஹான் மாநிலத்தில் தோன்றிய கொரோனாத் தொற்று தற்போது பல்வேறு திரிபுகளை எடுத்து தற்போது உலகம் முழுதும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய புள்ளி விபரங்களின்படி உலகம் முழுதும் கிட்டத்தட்ட 31 கோடி மக்களுக்கும் அதிகமானோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் ஆரம்பம் சீனா என்றாலும், ஆரம்பித்த சிறிது காலத்திலேயே கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா தெரிவித்திருந்தது. இருப்பினும் சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், தொற்றால் பாதிக்கப்படும் மக்களை சீன அரசு இரும்பு பெட்டிகளில் அடைத்து வைத்துள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இருப்பு பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என வயது வித்தியாசம் பாராது சீன அரசு இரும்பு பெட்டிகள் அடைகிறது. குறித்த இரும்பு பெட்டியில் ஒரு படுக்கையறை மற்றும் கழிவறை மட்டுமே காணப்படுகிறது.
குறித்த ஒரு பகுதியில் உள்ள ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள அனைவரும் இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் குளிர் காலா ஒலிம்பிக் தொடர் அடைத்த மாதமளவில் ஆரம்பமாகவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ‘பூஜ்ஜிய கொரோனா’ என்ற கிழக்கை அடிப்படையில் சீனா அரசு மக்களை இரும்பு பெட்டிகளில் அடைத்து தனிமைப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
#World