தற்போதைய அரசாங்கத்தின் திறமையற்ற நிதி முகாமைத்துவத்தினால் பெற்றோலியத்தைக் கொண்டு வர முடியவில்லை என ஐக்கிய சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டுக்கு எரிபொருளைக் கொண்டு வர அரசாங்கத்தால் முடியாமையால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஊடாக நாட்டை முடக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. ஆனால் அவ்வாறான நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.
தற்போதிய அரசாங்கத்தால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews