பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இந்தோனேசியப் பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை சேரம் மாவத்தை பிரதேசத்தில் கைதானவர்களில், குறித்த பாலியல் தொழில் விடுதி முகாமையாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51, 35, 31 மற்றும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
விடுதி முகாமையாளர், குருநாகலை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், ஏனையவர்கள் இந்தோனேசியப் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அறுவரும் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
#SrilankaNews