செயல் திறன் அரங்க இயக்கம் வட மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக நடத்துகின்ற தனி நடிப்பு போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி டிசம்பர் ஐந்து வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ‘பேரிடரை வெல்வோம்’ என்ற கருப்பொருளில் தனிநடிப்புப் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிக்கான விண்ணப்ப முடிவு திகதி இன்று நவம்பர் 30 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 05 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. போட்டி டிசம்பர் மாதம் 20 திகதி ஆரம்பமாகி நடைபெறும்.ஜனவரி 10 திகதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு நடைபெறும்.
சிறுவர்களுக்கான தனி நடிப்பு போட்டி திறந்த போட்டியாக நடைபெறும். இதில் வடமாகாண பாடசாலை சிறுவர்கள் மட்டும் பங்குகொள்ள முடியும். ஒவ்வொரு பாடசாலையிலுமிருந்து 18 வயதிற்குட்பட்ட ஆண்டு 4 – 13 வரையான வகுப்பு மாணவர்களில் பத்து மாணவர்கள் இதில் பங்குகொள்ள முடியும். கல்வி வலயம், மாகாணம் என்ற அடிப்படையில் போட்டி நடைபெறும்.
போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் சிறுவர்கள் கூகிள் படிவமூடாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கூகிள் படிவ இணைப்பு https://forms.gle/bD5Gdjbd9cFFKKQC6
போட்டிக்கு பதிவு செய்பவர்களுக்கான தனிநடிப்பு தொடர்பான அறிமுகக் கருத்தமர்வு செயல் திறன் அரங்க இயக்கத்தால் நடத்தப்படும்.
மேலதிக தகவல்களுக்கு வட்சப் இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளலாம.
ஈ.மெயில் :jaffnatheatre@gmail.com
தொ.பே.இல : 0094773112692 (whatsapp)
#SriLankaNews