மொனராகலை- படல்கும்பர எத்தாமுல்ல பிரதேசத்தில் இரண்டு இறப்பர் கிளைக்கிடையில் சிக்கி, சுதேச வைத்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான 70 வயதான பாராம்பரிய சுதேச வைத்தியரான டீ.எம். கருணாரத்னவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியர் 17ஆம் திகதி மாலை, இறப்பர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கு இடையில் இறுகி உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை படல்கும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews