பிரித்தானியாவை விட்டு வெளியேறும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள்: வரிச் சுமை அதிகரிப்பால் துபாய், இந்தியாவுக்குப் பயணம்!

25 691c5875429c2

பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளிச் செல்வந்தர்கள் பலர், அங்குள்ள வரிச் சுமை அதிகரிப்பு மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாகத் தொடர்ந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொழிலதிபர்களும், திறமையான வல்லுநர்களும் பிரித்தானியாவை விட்டுவிட்டு துபாய் அல்லது இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் பாதீட்டில் வரிகள் தொடர்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பல தொழிலதிபர்களுக்குச் செலவுகள் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டுக்கான பாதீட்டுக்குத் தயாராகும் நிலையில், பிரித்தானியா தனது வரிக்கொள்கைகள் குறித்துக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது. பாதீட்டில் மேலும் வரிகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், செல்வந்தர்கள் பிரித்தானியாவை விட்டு வேறு நாடுகளுக்கோ அல்லது தங்கள் சொந்த நாட்டுக்கோ திரும்பத் திட்டமிட்டு வருவதாகச் சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வெளியேற்றம், பிரித்தானியாவின் பொருளாதாரம் மற்றும் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Exit mobile version