இந்திய மீனவர்களின் படகு இரணைதீவு மக்களுக்கு! – டக்ளஸ் தேவானந்தா

Douglas

இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் தெரிவு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மயிலிட்டியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளின் நிலையை நாம் பார்வையிட்டோம். இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோம்.

இந்தியாவில் இருந்து அழுத்தங்கள் வந்தாலும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

நாம் நல்லெண்ணத்தை காட்டி இந்திய மீனவர்களை விடுதலை செய்த பொழுதும் இலங்கை மீனவர்கள் இன்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி செயல்படும் பொழுது நாமும் நீதிமன்ற பொறிமுறை ஊடாகவே செல்ல முடியும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version