உத்தர பிரதேசத்தில் வன்முறை – 8 பேர் பலி!

uththara

Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே விவசாயிகளின் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அப் பகுதிக்கு வருகை தர இருந்த துணை முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக விவசாயிகள் திரண்டிருந்தனர்.

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதலமைச்சரை வரவேற்க தனது காரில் சென்ற வேளை  அவரது காரையும் மறித்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா. இதில் விவசாயிகள் சிலர் படுகாயம் தாகவும்  இருவர் பலியாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவத்தில் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் உட்பட சில கார்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் இவ்வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தாக பொலீஸார் தெரிவிக்கின்றார்கள்.

Exit mobile version