இந்தியாவின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் அதிநவீன சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ரொக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று (2) மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான 24 மணிநேர கவுன்டவுன் நேற்று மாலை தொடங்கியது.
முன்னதாக இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளின் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் சமர்ப்பித்து வேண்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

