1852794 isro lvm 3 cms 03 launch
இந்தியாசெய்திகள்

இந்தியாவின் தகவல் தொடர்பை மேம்படுத்த இஸ்ரோவின் ‘CMS-03’: இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது!

Share

இந்தியாவின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரத்து 600 கோடி ரூபா​ய் செலவில் அதிநவீன சிஎம்​எஸ்​-03 செயற்கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்​விஎம்-3 ரொக்​கெட் மூலம் செயற்​கைக்​கோள் இன்று (2) மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்ளது.

இதற்கான 24 மணிநேர கவுன்​ட​வுன் நேற்று மாலை தொடங்கியது.

முன்னதாக இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளின் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் சமர்ப்பித்து வேண்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...