7 14 scaled
இந்தியா

திருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கும் உணவு ஏற்பாடு

Share

திருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு.., 10 லட்சம் பேருக்கும் உணவு ஏற்பாடு

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது.

கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்துகின்றனர்.

முதலில் மாநில மாநாட்டை நடத்தி, அடுத்தடுத்து மண்டல மாநாடு, மாவட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபயணங்களை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருக்கிறார்.

தற்போது திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 25ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்கு அனுமதி கோரி கோட்ட மேலாளிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்கும் 10 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்கான ஆர்டரும் கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 8
இந்தியாசெய்திகள்

நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் இருக்கும் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...

23 3
இந்தியாசெய்திகள்

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்

ஏசி வேலை செய்யவில்லை அல்லது ரயில் தாமதமாக வந்தால், முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெறுவது...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...