இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மித்ரா சக்தி இராணுவ பயிற்சியின் 8ஆவது மெகா இராணுவ கூட்டுப் பயிற்சி நாளை இலங்கையின்
அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இப் பயிற்சி இடம்பெறவுள்ளது. இரு இராணுவங்களின் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.
தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு இராணுவத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும் இந்த பயிற்சி உதவும் என்றும் இந்திய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a comment