இந்தியா பாதுகாப்பிற்காக ஆயுதங்களை விற்பனை செய்கின்றது

886429

இந்தியா பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமன்றி விற்பனையிலும் ஈடுவடுவதால், போருக்கு வழிவகுக்குகிறது என்று மற்ற நாடுகள் நினைக்க முடியாது.

ஏனெனில், ஆயுதங்களை வாங்கும் வெளிநாடுகள், அந்தந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளவே இந்தியா வழங்குகிறது என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதற்கு உதாரணமாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், இந்திய பயணத்தின் போது பேசுகையில், ‘‘ஐ.நா. சார்பில் சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தும் இராணுவப் படைக்கு (பல நாடுகள் சேர்ந்த அமைதிப் படை) ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தியா அனுப்பி வருகிறது.

அவர்களில் ஏராளமானோர் பல நாடுகளில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். உலக அமைதிக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கை அளப்பரியது’’ என்று மனம் திறந்து பாராட்டியிருப்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் வரவு – செலவுத் திட்டத்தில் இராணுவத்துக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இராணுவத்துக்கு ஏராளமாக நிதி ஒதுக்குவது வளர்ச்சியை பாதிக்கும் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், இராணுவத்துக்கு நிதி ஒதுக்கி அதிநவீன ஆயுதங்கள் தயாரிப்பது மட்டுமன்றி, மற்ற சிறிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அவற்றை வழங்குவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

#Indianews

Exit mobile version