அதிகரிக்கப்படவுள்ள பட்டதாரிகளின் வருமானம்!!

1613da96 b60c6c28 917c7392 ad7913e5

அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

இதன்போது, அவர் பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி தற்போது அவர்கள் ரூ. 20000 மாதந்த வருமானம் பெற்று வருகின்றனர். அவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு ரூ. 41,000 ஆக வழங்கப்பட உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

#SriLankaNews

Exit mobile version