அதிகரித்தது தேங்காயின் விலை!

coconut 2

சந்தைகளில் தற்போது தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக தேங்காய் மட்டையை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேங்காய் தட்டுப்பாடு காரணமாக அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தேங்காய் ஒன்று 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version