பால்மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு!

New Project 22

ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என பால்மா அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர், அடுத்த வாரத்திற்குள் பால்மா தட்டுப்பாடு தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version