23 வயதில் கோடிக்கணக்கில் வருமானம்.. சொத்துக்களை குவிக்கும் ஷாருக்கான் மகள்..!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 23 வயது மகள் சுஹானா கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும் அவர் மும்பையில் பல ஆடம்பர வீடுகளை விலைக்கு வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட் பாஷா என்று கூறப்படும் நடிகர் ஷாருக்கானுக்கு மும்பையில் பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாருக்கானின் மகள் சுஹானா சமீபத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். சுஹானா நடித்த முதல் படமான ’The Archies’ என்ற படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து அவர் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய ஸ்டாராக அவர் வருவார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுஹானா தற்போது நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக அவர் வாங்கிய அட்வான்ஸ் பணமே கோடிக்கணக்கில் வந்தது என்றும் அதை வைத்து அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக அவர் மும்பையின் முக்கிய பகுதியில் 9 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி இருப்பதாகவும் அது போக இன்னும் சில நிலங்களை வாங்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஷாருக்கானுக்கு மும்பையில் பல இடங்களில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் இருக்கும் நிலையில் தற்போது அப்பாவுக்கு போட்டிக்காக மகளும் சொத்துக்களை வாங்க ஆரம்பித்து விட்டார் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் சொந்தமாக பிசினஸ் செய்ய இருப்பதாகவும் அதற்கான முன்னேற்பாடுகளை அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.