“நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கருத்துகளை பரப்பி வருகின்றனர். டுபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரிசி உற்பத்தி செய்யப்படுவதில்லை. அந்நாட்டு மக்கள் பட்டினியிலா கிடக்கின்றனர்? இறக்குமதி செய்யப்படுகின்றது.
எமது நாட்டில் தற்போது தட்டுப்பாடு ஏற்படும் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். எனவே, எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அவை இறக்குமதி செய்யப்படும்.” – என்றார்.
#SriLankaNews