தடுப்பூசி தொடர்பில் யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!!

161380180674

தடுப்பூசி தொடர்பில் யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!!

இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை விரைவாக பெற்று தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுதிக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக விரைவாகவும் அமைதியான முறையிலும் யாழ். மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பொதுமக்கள் அனைவரும் தமது இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை தாமதிக்காது அடுத்த ஓரிரு நாள்களுக்குள் பெற்று கொவிட்-19 நோய் தொற்று தாக்கத்திலிருந்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மேலும் தற்போதைய இறப்பு நிலைமையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 60 க்கும் மேற்பட்டோரில் பெண்கள் இறப்பு வீதம் அதிகமாக காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக இதுவரையான அறிக்கைகளின்படி இறந்தோரில் 70 வயதுக்கு மேற்பட்டோரில் ஆண்கள் 79 பேராகவும் பெண்கள் 53 பேராவும் காணப்படுகின்றனர்.

எனவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடிய சூழ்நிலை அதிகமாக காணப்படுவதால் எவ்வித தயக்கமின்றி இத் தடுப்பூசி விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கமைய உரிய தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு சென்று அடுத்துவரும் நாள்களில் விரைவாக தமது தடுப்பூசியைப் பெற்று கொவிட்-19 தொற்றிலிருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version