இரசாயன உர இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நெல் மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளுக்கு தாவர ஊட்டச்சத்துக்கள் எனும் பெயரில் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை.
இவ் விடயம் தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கவில்லை. மக்களின் நன்மை கருதியே சேதன உர ஊக்கிவிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை – எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் யூரியாவை இறக்குமதி செய்வதன் மூலம் இரசாயன உரத் தடையை மாற்றியமைத்துள்ளது. அது ‘தாவர ஊட்டச் சத்து’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews