தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகளால் பல நாடுகளில் கடன் வாங்க நேரிட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிதி அமைச்சர் அல்லோலப்பட வேண்டிய நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் பல தேவைகள் காணப்படுகின்றன. அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
சுயதொழில் முயற்சிகளுக்காக அரசாங்கம் உதவிகளை நல்கிய போதிலும் விற்பனை இன்மையால் அவை தேங்கிக் கிடக்க கூடிய நிலையே காணப்படுகின்றன.அத்தோடு வடக்கு கிழக்குக்கு உதவ முன்வரும் புலம்பெயர் தமிழர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலீட்டின் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை பெற இயலும். இதனை செய்வதற்கு பசில் ராஜபக்சவுக்கு திறமை உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment