கனமழை ஏற்படுத்திய பாதிப்பு: மரக்கறி உற்பத்தி பாதிப்பு (படங்கள்)

நாட்டில் பரவலாக கன மழை பெய்து வரும் நிலையில் நுவரெலியா, கந்தப்பளை மற்றும் இராகலை பிரதேசங்களில் நேற்று பெய்த பலத்த மழையினால் என்றும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியதால், பல ஏக்கர் விவசாய காணிகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளன. விவசாய காணியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

nuw 02

இந்நிலையில் தாழ்ந்த பிரதேசங்களில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்களிலும் வெள்ளநீர் புகுந்ததால் மக்களும், வியாபாரங்களும் பாதிக்கப்பட்டன .பல இடங்களிலுள்ள வீதிகளில் வெள்ளநீர் நிரம்பியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version