நீதிபதிகளுக்கு உடனடி இடமாற்றம்!

istockphoto 537971779 612x612 1

நாடளாவிய ரீதியில் 118 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ள குறித்த 118 நீதிபதிகளுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழுவின்செயலாளர் சன்ஜீவ சோமரத்தினவினால் உத்தியோகபூர்வகமாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பணியாற்றும் நீதிபதிகளுக்கும் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

மல்லாகம் நீதிமன்றில் கடமையாற்றும் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாக கடமையாற்றிய ஆனந்தராஜா யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றிற்கும்

மட்டக்களப்பு மாவட்ட நீதிவானாக கடமையாற்றும் ரீ.கருணாகரன் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

மன்னார் மாவட்ட நீதிவான் பீ.சிவகுமார் மல்லாகம் மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சீ.றிஸ்வான் பொத்துவில் மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

வாழைச்சேணை மாவட்ட நீதிபதி எம்.எம் பசீல் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி ஜீ.சைலயன் மல்லாகம் மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கு மேலதிக நீதிவானாகவும்

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிற்கும்

பொத்துவில் மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.றவி கண்டி நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாகவும்

இடமாற்றம் பெற்று செல்லவுள்ளனர் என நீதிச்சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version