வீதியில் துப்பினால் உடனடி சிறை – இன்று முதல் அமுல்!!!

ezgif.com gif maker 1

வீதிகளில் ஆங்காங்கே வெற்றிலையை சாப்பிட்டு எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசேட பொறுப்புகள், சுற்றாடல் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ச, பொலிஸ் சுற்றாடல் பிரிவுக்கு இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.

வீதிகளில் ஆங்காங்கே எச்சில் துப்புவதால், கடும் அசுத்தம் ஏற்படுவதுடன் கொரோனா போன்ற வைரஸ் தொற்று நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

குற்றவியல் தண்டனை சட்டத்திற்கு அமைய இந்த குற்றத்தை செய்யும் நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என ரொஷான் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

 

 

Exit mobile version