IMF பிரதிநிதிகள் – ஜனாதிபதி சந்திப்பு!

imf

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. .

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதியில் ஆலோசனை, நிலையான அபிவிருத்தித் திட்டம், கடன் பொறிமுறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படலாம் என தெரியவருகின்றது.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version