ஆண்டுக்கான பொருளாதார மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியக் குழு ஒன்று இன்று கொழும்பு வருகின்றது.
பொருளாதார மதிப்பீடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் 4 ஆவது இலக்க யாப்பு விதிகளின் கீழ் நடத்தப்படுகின்றது.
இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இக்குழு நாட்டில் தங்கியிருந்து மதிப்பீடுகளை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் அந்நிய செலாவணிகளின் நெருக்கடிகள் குறித்தும் பரிசீலிக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை வங்கிகள் எவ்வித நிதி உதவிகளையும் கோராத பட்சத்திலும் அரசாங்கத்தின் தேவைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment