சட்ட விரோதமாக எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்திற்கான விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசுடமையாக்கப்பட்ட படகுகள் பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளிக்கப்பட்டு அவை மீனவர்களின் பாவனைக்காக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பயன்பாட்டுக்கு உதவாத படகுகள் விற்பனை செய்யப்பட்டு இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாம் கட்ட அபிவிருத்தி பணிகள் வேறு காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையால் சரியாக திட்டமிடப்படாமல் மீனவர்களுக்கு பிரயோசனமற்று சென்றுள்ளது.
ஆனால் விரைவில் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் சிறப்பாக மேற்கொள்வதற்கு பிரதேச மீனவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டே இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment