mahintha.jpgg
செய்திகள்அரசியல்இலங்கை

உயிருடன் இருக்கும் வரை மஹிந்தவின் விருப்பம் பலிக்காது! – திலும் அமுனுகம

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஒய்வு முடிவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு பயணிகள் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒய்வு பெறவுள்ளார் என்றும், இதனை தொடர்ந்து பிரதமர் பதவி பசில் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில், இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் இந்த முடிவை அனுமதிக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர் இவ்வாறு ஒய்வு பெற முயற்சித்திருந்தார். ஆனால் மக்கள் அதனை அனுமதிக்கவில்லை.

இதேபோல் அவர் மீண்டும் ஒய்வு பெற முயற்சியெடுத்தலும் மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். பிரதமர் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ மக்கள் ஒருபோதும் அவரின் ஓய்வை அனுமதிக்கப்போவதில்லை.

அவர் உயிருடன் இருக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது. மக்களின் விருப்பம் இதுவே என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...