விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் நீதி கிடைக்கும்வரை, தான் அமைச்சு பணிகளை முன்னெடுக்கப்போவதில்லை என அறிவித்திருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, உத்தியோகபூர்வ வதிவிடம் மற்றும் அரச வாகனங்களை மீள கையளித்துள்ளார்.
அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். எனினும், வாசுதேவ நாணயக்கார நீக்கப்படவில்லை.
இருந்தாலும் இவ்விருவருக்கும் நீதி கிடைக்கும்வரை தான் அமைச்சு பணிகளை முன்னெடுக்கமாட்டார் என வாசுதேவ நாணயக்கார அறிவிப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே அரச இல்லம் மற்றும் வாகனங்களை மீள ஒப்படைத்துள்ளார்.
#SriLankaNews