ஊழல் மோசடிகளுக்கு நிச்சயம் முடிவு கட்டுவேன்! – பொன்சேகா

ponseka

” ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான் சட்டம், ஒழுங்கு அமைச்சை பொறுப்பேற்ற பிறகு, நிச்சயம் ஊழல், மோசடிகளுக்கு முடிவு கட்டுவேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழி நிறைவேறுவதை மக்கள் விரும்புகின்றனர். எனவே, அந்த உறுதிமொழியில் இருந்து தலைவரால் பின்வாங்க முடியாது.

இவ்வாறு அமைச்சு பதவி கிடைக்கப்பெற்ற பிறகு நிச்சயம் ஊழலுக்கு முடிவுகட்டுவேன். இராணுவத்தில் நான் இருந்தபோது அதனை செய்தேன். இராணுவத்தில் 4 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட ஒரு இராணுவ அதிகாரியை வீட்டுக்கே அனுப்பினேன். எனவே, மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம்வரை நிச்சயம் கைவைப்பேன்.

முதலில் மேல் மட்டத்தில்தான் கைவைக்க வேண்டும். அப்போது கீழ்மட்டம் தானாகவே திருந்துவிடும்.” – என்றார் பொன்சேகா.

#SriLankaNews

Exit mobile version