ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சர். கட்சி தலைவர் இதனை உறுதிப்படுத்திவிட்டார். மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நிச்சயம் தடை விதிப்பேன். அதற்கான அனுமதியை வழங்கமாட்டேன் – என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், புலிகள் அப்பாவி மக்களைக் கொன்றனர். மதத்தலங்கள்மீது தாக்குதல் நடத்தினர். மிலேச்சத்தனமாக செயற்பட்டனர்.
நாட்டை பிளவுபடுத்த நினைத்தனர். இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுத்த இவர்களை நினைகூறுவது சட்ட விரோதமாகும்.
சிறைகளிலுள்ள புலிகளை விடுதலை செய்யுங்கள். அதற்கு நாமும் ஆதரவு. என்னை கொலை செய்ய வந்த மொரிஷ் என்பவரை முதலில் விடுதலை செய்யுங்கள்.
இராணுவம் போர்க்குற்றம் இழைக்கவில்லை. இராணுவத்திலுள்ள ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம்.
அதேவேளை, போர் முடிவடைந்திருந்தாலும் உள்ளக அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கக்கூடாது என்ற கருத்துடன் என்னால் உடன்படமுடியாது என்று இதன்போது அவர் குறிப்பிட்டார்.
Leave a comment