எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு இன்று பாராளுமன்ற்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணையை முன்னைடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இவ் வெடிப்புச் சம்பவங்கள் நாளாந்தம் எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வெடிப்பு சம்பவங்கள் அசாதாரணமானவை அல்ல. கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 18 லீற்றர் கலப்பின எரிவாயு சிலிண்டரை அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தியப் பின்னரே குறித்த சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளன.
இது அரசின் பாரிய இலாபமீட்டும் தந்திரம். இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப எரிவாயு சிலிண்டர்களில் பியூட்டேன் மற்றும் புரொப்பேன் வீதங்கள் பூர்த்தி செய்யப்படாமல் வாயுக் கலவை மாற்றப்பட்டு எடை குறைக்கப்பட்டமையே இவ்விபத்துச் சம்பவங்களுக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
#SriLankaNews