பொழுதுபோக்காளர்களின் சொர்க்கமாக கருதப்படும் ´சருங்கல் கந்த´ என்று அழைக்கப்படும் பதுளை ரீதிபான குன்றின் உச்சியில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குன்றுக்கு சென்ற சிறுவர்கள் சிலர் குறித்த மனித எச்சங்களை கண்டுள்ளநிலையில் அவர்கள் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் நேற்றையதினம் (26) பதுளை பொலிஸாரிடம் இது தொடர்பில் அறிவித்துள்ளனர். தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மண்டை ஓடு ஒன்றையும் சில மனித எலும்புத் துண்டுகளையும் குறித்த பகுதியிலிருந்து மீட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.