இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று இடம்பெற்ற கொடூர தீ விபத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்துள்ளனர்.
இது சம்பவம் தொடர்பாக அகமது நகர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போஸலே கருத்து தெரிவிக்கையில்,
அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று இடம்பெற்ற கொடூர தீ விபத்தில், 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்ததாகவும், இந்த கொடூர தீ விபத்து இன்று 11 மணிக்குநடந்ததாகவும், விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு 10 கொரோனா தொற்றாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்தால் அகமதுநகர் பகுதி பெரும் துக்கத்தில் மூழ்கியுள்ளது.