10745 24 10 2025 10 3 0 5 IMG 20251024 WA0029
செய்திகள்இலங்கை

ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து: 25 பயணிகள் உடல் கருகி பலி!

Share

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 24) அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு 40 பயணிகளுடன் படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டது.

இந்தப் பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்துக்கு வந்த போது, எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் இருசக்கர வாகனம் பேருந்தின் கீழ்ப்பக்கம் சிக்கியதாகத் தெரிகிறது.

மோதியதில் பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்தது. அடுத்த சில வினாடிகளில் தீ மளமளவெனப் பேருந்தின் மற்ற பகுதிக்கும் பரவியுள்ளது. இதில் எரிபொருள் இருந்த டேங்கிலும் தீப்பற்றி அது வெடித்ததாகத் தெரிகிறது.

விபத்தின் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது தவித்தனர். சிலர் அவசர காலத்தில் உதவும் எமர்ஜென்சி எக்சிட் (Emergency Exit) கதவை உடைத்துக்கொண்டு லேசான காயங்களுடன் வெளியேறினர். பேருந்தில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் தீ மற்றும் புகையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் (கிளீனர்) சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர்.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வமான அரசுத் தரப்பு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...

Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த்...

25 68fb1c1d6b80d
செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர மரணம்: தலையில் மற்றும் மார்பில் பலத்த காயம் – சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறுதி!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும்...

25 68fb0fa27ab98
செய்திகள்இலங்கை

2 கோடிக்கு மேல் மோசடி: கொழும்பு புறக்கோட்டை நிறுவனத்தில் திட்டம் தீட்டிப் பணத்தைக் கையாடிய பெண் உட்பட 8 பேர் கைது!

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான...