நாவற்குழியில் வீடுபுகுந்து தாக்குதல் – தந்தை ,மகன்கள் காயம்

1 1 1 738x375 1

நாவற்குழி பகுதியில் வீட்டினுள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.

அத்தோடு வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளது.

நேற்று (28) இரவு நாவற்குழி / 294 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இந்த வன்முறைக்கும்பல் வீட்டின் ஜன்னல்கள் , கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்துள்ளதோடு வீட்டிலிருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது .

இந்த தாக்குதலில் காயமடைந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களும் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version