வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதன்படி, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று அறிவுறுத்தியுள்ளார்.
நாளையதினம் இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சிறப்பு விடுமுறை நாளுக்கு பதிலாக எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
#SriLankaNews