தடுப்பூசி அட்டைகள் பதுக்கல் – அதிகாரி கைது!

covid identity

தடுப்பூசி அட்டைகள் பதுக்கல் – அதிகாரி கைது!

காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியிடமிருந்து 45 கொவிட் தடுப்பூசி அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான அதிகாரி அதிகளவான தடுப்பூசி அட்டைகளை வைத்துள்ளார் என பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காலி மாநகர சபை பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதியன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பங்குபற்றியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி திட்டத்துக்குப் பின்னர் குறித்த அட்டைகளை ஒப்படைக்க வேண்டியிருந்த போதிலும், அவர் அட்டைகளை ஒப்படைக்காது வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version